5மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 10மணி – வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உ.பி.யில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில் முன்னணியில் தொடர்கிறது.

பஞ்பாபில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பாரக்கப்பட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சன்னி இரு தொகுதிகளில் போட்டியிட்டும் அந்த இரு தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்து வருகிறார். அதுபோல முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங்கும் பின்னணியில் இருந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 காலை  10 மணி நிலவரப்படி  5 மாநிலங்களில் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் விவரம்

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில்  பாஜக 240 இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 104 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 84 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் பாஜக 4  இடங்களிலும, சிரோன்மணி அகாளிதளம் 9 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அங்கு பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19, பிஎஸ்பி 1 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது உள்ளது. பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13  இடங்களிலும், மற்றவை 9  இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.