தனுஷ் செய்றதையே செய்யும் செல்வராகவன்..ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..!

தனித்துவமான மற்றும் தரமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர்
செல்வராகவன்
. தன் முதல் படமான காதல் கொண்டேன் படத்திலேயே ஒரு இயக்குனராக நிரூபித்த செல்வராகவன்.அதைத்தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டார்.

இருப்பினும் இவர் இயக்கிய ஒருசில படங்கள் வெளிவந்தபோது அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. சுவாரசியமான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரம் என அசத்தும் செல்வராகவன் தற்போது தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்கிவருகிறார்.

இதற்கெல்லாம் ரஜினி காரணம் இல்லை..!எல்லாம் அவர்கள்தான்…தனுஷ் ஓபன் டாக்..!

இரட்டை வேடங்களில்
தனுஷ்
நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இப்படமா திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் செல்வராகவன் தற்போது நடிகர் அவதாரம் எடுத்திருப்பது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

செல்வராகவன்

விஜய்யின்
பீஸ்ட்
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் செல்வராகவன்
சாணிக்காகிதம்
என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் சாணிக்காகிதம் படத்தின் அப்டேட் தற்போது வந்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும்
கீர்த்தி சுரேஷ்
நடிக்கும் இப்படம் OTT யில் வெளியாகவுள்ளது. மார்ச் 25 அல்லது ஏப்ரல் 1 இப்படம் OTT யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செல்வராகவன்

சமீபத்தில் தனுஷின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகி வரும் நேரத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் முதல் படமே OTT யில் வெளியாவது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

நடிகர்களுக்கு இணையான ரசிகர்களை வைத்திருக்கும் செல்வராகவன் நடிக்கும் படம் திரையில் வெளியானால் நன்றாக இருக்கும் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.