பகுஜன் சமாஜ் கட்சி வாஷ் அவுட் ஆக என்ன காரணம்? – மாயாவதி சொல்றதை கேளுங்க!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி( பிஎஸ்பி) படுதோல்வி அடைந்துள்ளது.

நான்கு முறை மாநிலத்தில் ஆட்சி புரிந்துள்ள அக்கட்சி, இந்தத் தேர்தலில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வென்றுள்ளதுடன் அதன் வாக்கு சதவீதமும் கணிசமாக சரிந்துள்ளது பிஎஸ்பி நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் , பிஎஸ்பியின் தோல்விக்கான காரணங்களை அக்கட்சியின் தலைவர்
மாயாவதி
பட்டியலிட்டு விளக்கி உள்ளார்.

‘பிஎஸ்பி பாஜகவின் ‘பி டீம்’ என தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்திவிட்டனர். எங்களை பாஜகவின் பி டீம் எனக் காட்டிய ஊடகங்களின் தீவிர பிரச்சாரம்தான் முஸ்லிம் மக்களையும், பாஜக எதிர்ப்பு வாக்காளர்களையும் மனம்மாற்றி உள்ளது.

அத்துடன் சமாஜ்வாதி கட்சியை போல
பகுஜன் சமாஜ் கட்சி
தேர்தலில் வலுவாக போட்டியிடவில்லை என்ற கருத்தும் தேர்தலின்போது பரப்பப்பட்டது.

சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசத்தில் ‘காட்டு தர்பார்’ திரும்பும் என்று அஞ்சிய உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர சமூகத்தில் உள்ள எங்களின் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

இவற்றின் காரணமாகவே பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் தோல்விை சந்தித்துள்ளது. ஆனால், தேர்தல் தோல்வியால் சோர்ந்துவிடமாட்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று மாயாவதி நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.