லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீட்டுத் தேதி வெளியாகிறது. இதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

image

image

இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை வரும் மார்ச் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி, ‘விக்ரம்’ வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறது படக்குழு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.