கர்நாடகா: இருசக்கர வாகனத்தில் அச்சமின்றி ஆபத்தான பயணம் – எப்படி தெரியுமா?

கர்நாடகாவில் ஒரு இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் நெடுஞ்சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு ஆண்கள் உட்பட 9 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை பார்த்த அந்த பகுதியினர் பின் தொடர்ந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.
image
எவ்வித உயிர் பயமும் இல்லாமல் குழந்தைகள் உட்பட 9 பேர் பயணிக்கும் இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் கொப்பல் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த போலீசார், எச்சரித்து பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.