IPL Today Match KKR vs PBKS: பஞ்சாப், கேகேஆர் பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் – வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் 42வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. KKR தற்போது ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. PBKS இரண்டு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியைப் பொறுத்த வரையில் பந்துவீச்சை விட பேட்டிங்கில் செம ஸ்டிராங்காக உள்ளது. மிட்செல் ஸ்டார்க் அந்த அணியில் இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இதுவரை விளையாடவில்லை. ஒரு சில போட்டிகளைத் தவிர ஸ்டார்க் பந்துவீச்சு மிக மோசமாகவே இதுவரை இருந்திருக்கிறது. ஸ்டார் பவுலரே தடுமாறிக் கொண்டிருப்பதால் மற்ற பவுலர்கள் மீது எதிரணி ஈஸியாக தாக்கத்தை ஏற்படுத்திவிட முடிகிறது. பேட்டிங்கில் சுனில் நரைன், பில் சால்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முத்திரை பதிக்கிறார்கள்.

வெங்கடேஷ் ஐயர் மட்டும் பார்முக்காக போராடிக் கொண்டிருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் 150க்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் நரைன் மட்டுமே சிறப்பான எகானமி ரேட்டைப் பராமரிக்கிறார். ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் (PBKS) பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் போன்ற முக்கிய வீரர்களின் பார்மில் இல்லை. அவர்கள் கட்டாயம் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறிமுக பிளேயர்களான அசுதோஷ் மற்றும் ஷஷாங்க் ஆகியோர் சூப்பராக விளையாடி பஞ்சாப் அணியின் பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக இருகின்றனர். கேகேஆர் அணியின் பந்துவீச்சைப் போலவே பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சும் இருக்கிறது என்பதால் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணி வெற்றி வாய்ப்பை பெறும். 

நேருக்கு நேர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் மோதலில், நைட் ரைடர்ஸ் அணி 32 போட்டிகளில் விளையாடி 21ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பஞ்சாப் கிங்ஸ் 11 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட் 

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 10 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணிகளும், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகளும் இடையே சமமான வெற்றி பெற்று உள்ளது. அதாவது தலா 5 வெற்றிகளை பெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கும் மேலாக அடிக்க வேண்டும். அதேநேரத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கும் சேஸிங் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்தந்த அணிகளின் பேட்டிங் வலிமையை பொறுத்து வெற்றி வாய்ப்பு இருக்கும். 

பஞ்சாப், கொல்கத்தா அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் : 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க்/துஷ்மந்த சமீரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா. Impact Player : வெங்கடேஷ்

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், Impact Player : அர்ஷ்தீப் சிங்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.