அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் பணி நேரம் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி
ரம்ஜான்
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் இது, பிறை நிலவைப் பார்த்து முடிவு செய்யப்படும். ரம்ஜான் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் ஒன்பதாவது மாதமாகும். இந்தப் பண்டிகையின் போது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பார்கள்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் பணி நேரம் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ரம்ஜான் மாதத்தில், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
அரசு ஊழியர்கள்
பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமைகளில் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வசதியை பெற, மேற்பார்வையாளர், துறையின் இயக்குநர் மற்றும் தங்கள் நிறுவனத்தில் உள்ள மனித வளத் துறையிடம் இருந்து அரசு ஊழியர்கள் அனுமதிகளைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிகபட்சமாக 40 சதவீத அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.