பழம்பெரும் பாலிவுட் நடிகை காலமானார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக் (92), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சிவாஜி பூங்கா மயானத்தில் தகனம் செய்யப் பட்டது. மராத்தி மற்றும் இந்தியில் நடித்துள்ள வத்சலா தேஷ்முக்கின் மறைவுக்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.