இந்த 2 விஷயம் சரியில்லை.. புடினுக்கு என்னமோ ஆயிருச்சு.. கிளப்பி விடும் இங்கிலாந்து!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு உடல் நிலையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக
இங்கிலாந்து ஊடகங்கள்
செய்தி கிளப்பி வருகின்றன.

உக்ரைன் போரில் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கின்றன. நாடுகள் என்றால் அரசுகள் மட்டும் அல்லாமல் வர்த்தகத் துறையினரும் கூட ரஷ்யாவுக்கு எதிராக உள்ளனர். அதே நிலையில்தான் ஐரோப்பிய நாடுகளும் உள்ளன. இதையெல்லாம் சமாளித்துத்தான்
ரஷ்யா
போரிட வேண்டியுள்ளது.

உக்ரைன் மீது புடின் போர் தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தன. புடினும் எதிர்பார்த்தபடி அதிரடியாக அட்டாக்கை ஆரம்பித்து விட்டார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை அறிவித்தன. ஆனால் புடின் ஆட்டத்தை நிறுத்துவார் என்று பார்த்தால் விடாமல் வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளன.

தற்போது புடினுக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் செய்து வருகின்றன. குறிப்பாக இந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் அனைத்துமே ரஷ்யாவுக்கு எதிராகத்தான் உள்ளன, எழுதுகின்றன, தகவல் பரப்புகின்றன. அந்த வகையில் தற்போது புடின் உடல் நலம் குறித்து இங்கிலாந்து ஊடகங்கள் கிளப்பி விட ஆரம்பித்துள்ளன.

366 கோடீஸ்வரர்கள்.. 205 “கிரிமினல்கள்”.. 80 வயசு தாத்தா 2 பேர்.. கலகலக்கும் உ.பி.சட்டசபை!

விலாடிமிர் புடின்
எப்போது நல்ல உடற்கட்டுடன் இருக்கக் கூடியவர். உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் மிகுந்த அக்கறை காட்டுபவர். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர். ஆனால் சமீப காலமாக அவரது உடல் நிலையில் நிறைய மாற்றம் தெரிவதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன. அவரது உடல் தோற்றத்தில் பல மாற்றங்களை காண முடிகிறதாம்.

புடினின் கழுத்து மற்றும் முகம் வீங்கிப் போனது போல தெரிவதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஸ்டிராய்ட் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கலாம். அதனால்தான் முகம், கழுத்து வீக்கமாக தெரிவதாக அது சந்தேகப்படுகிறது.

ரஷ்ய விவகாரம் தொடர்பான அமெரிக்க நிபுணர் பியோனா ஹில் கூறியதாக போலிட்டிகோ என்ற இதழ் கூறுகையில், புடின் உடல் நலம் நிச்சயம் சரியில்லை. அவரது முகமே இதைக் கூறுகிறது. நிச்சயம் அவர் ஏதோ பிரச்சினையில் உள்ளார். அவருக்கு முதுகு வலி உண்டு. அதுகுறித்து பலமுறை அவர் சிகிச்சை எடுத்துள்ளார். தற்போது அது தீவிரமடைந்திருக்கலாம். இதற்காக அவர் அதிக அளவில் ஸ்டிராய்ட் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அவருக்கு வேறு ஏதாவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பியோனா ஹில் கூறியுள்ளார்.

சோவியத் யூனியன் வரலாற்றில் எந்த ஒரு தலைவருமே நீண்ட காலம் பொறுப்பில் இருந்ததில்லை. ஜோசப் ஸ்டாலின் மட்டும்தான் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அவர் பதவியில் இருந்தபோதே மரணமடைந்தார். ஸ்டாலினுக்குப் பிறகு புடின்தான் ரஷ்யாவின் தலைவராக நீண்ட காலம் இருக்கிறார்.

டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை அமெரிக்க உளவுப் படையினரை மேற்கோள் காட்டி ஒரு செய்தி போட்டுள்ளது. அதில், புடினுக்கு கீமோ தெரபி மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் அவரது முகம் உப்பிப் போயுள்ளதாக கூறியுள்ளது.

“ஆயுதங்கள் தேவை”.. சீனாவின் கதவைத் தட்டிய ரஷ்யா.. கடுப்பில் அமெரிக்கா!

புடின் எப்போதுமே நல்ல உடல் கட்டுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். சல்மான் கான் போல சட்டையைக் கழற்றி விட்டு “பேர்பாடியுடன்” போஸ் கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர். குதிரையேற்றம் செய்வது போல, ஜூடோ செய்வது போல எல்லாம் அவர் நிறைய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்தப் புகைப்படங்களில் உள்ள புடினுக்கும், தற்போதைய புடினுக்கும் நிறைய தோற்ற வேறுபாடுகள் தெரிவதாக கூறப்படுகிறது.

புடினிடம் காணப்படும் இன்னொரு மாற்றமாக அவர் சமீப காலமாக வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்தாலோ அல்லது அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினாலோ மிக நீளமான மேசை முன்பு அமர்ந்துதான் எதையும் செய்கிறார். அதாவது நீளமான மேசையின் ஒரு முனையில் புடின் இருக்கிறார். மேசையின் எதிர் முனையில் பிற தலைவர்கள் அமர்கிறார்கள். பார்க்கவே வித்தியாசமாக இந்த காட்சி இருக்கிறது. இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட போட்டு விட்டார்கள்.

மேலே பாஜக.. கீழே அதிமுக.. நடுவுல யாரெல்லாம் இருக்காங்க.. சசி தரூர் அடித்த “செல்ஃப் கோல்”!

உக்ரைன் போர்
தொடங்குவதற்கு முன்பு மாஸ்கோ வந்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் நடந்த சந்திப்பின்போதுதான் இந்த நீண்ட மேசை போட்டோ வெளியாகி பரபரப்பானது. இரு தலைவர்களுக்கும் இடையே 13 அடி இடைவெளி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இவ்வளவு இடைவெளி விட்டு புடின் உட்காருகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் மேக்ரான் மாஸ்கோ வந்த பிறகு கோவிட் டெஸ்ட் எடுக்க மறுத்த காரணத்தால்தான் இத்தனை பெரிய டேபிள் போட்டு அமர வைக்கப்பட்டார் என்று கிரெம்ளின் விளக்கியிருந்தது.

ஆனால் புடினின் உடல் நல பாதிப்பு, அவரது முகத் தோற்ற மாற்றம் உள்ளிட்டவற்றை யாரும் கவனித்து விடக் கூடாது என்பதற்காகவே டேபிளை பெரிதாக போட்டு அமர்கிறார் புடின் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.