ஜெயலலிதா மீதான வழக்கு – தீபா, தீபக் சேர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீட்டு வழக்கில், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
WEALTH TAX எனும் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஜெயலலிதா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. அதில் தன்னை விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் மனுவை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 2008ஆம் ஆண்டு ஜெயலலிதாவை விடுவித்தது. அதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
image
அதில் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதால் அவரின் வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க வேண்டுமென வருமான வரித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று அனுமதி அளித்த நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா மற்றும் தீபக்கிடம் வழங்க வருமானவரித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.