புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை- இலங்கைத் தமிழர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி – வாரிசுதாரருக்கு வேலை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆவின் நிறுவனத்தின்  புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை தொடக்கம், இலங்கைத் தமிழர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி, கல்வித்துறை ஒப்பந்தம், வாரிசுதாரருக்கு வேலை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார்.

மதுரை ஆவினில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து,  மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மற்றொரு நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இயங்கும் விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் மற்றும் விடுதிகளையும் திறந்து வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இயங்கும் விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 3 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்  ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 4 விடுதிக் கட்டடங்கள், 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் .க.ஸ்டாலின் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் திரு.ஜீவானந்தம் அவர்களின் பேரனுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணை –  வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் Cognizant நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்ப தர மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.84.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்றுதலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை சார்பில் மதுரை பால் பண்ணை வளாகத்தில் 65 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாள ர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, 26.66 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சென்னை , அம்பத்தூரில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஐஸ்கிரீம் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்குத் தரமானதாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கக் கூடிய வகையில் உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆவின் நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் நிதியிலிருந்து 65 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில், சுமார் 100 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தேசிய பால்வள வாரியத்தின் மூலம் மதுரை பால் பண்ணை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் 50 மி.லி., 100 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளிலும் மற்றும் நுகர்வோர்களுக்கு தேவைகேற்ப அளவுகளில் ஐஸ்கிரீம் சிப்பமிடும் வசதிகளுடன், பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் குல்ஃபி ஐஸ்கிரீம் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அவை தென் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக 109 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் மாணவச் செல்வங்களின் கல்வி இடைநிற்றலைக் கருத்திற் கொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விகொரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது. அக்குழந்தைகளுக்கு மெய்நிகர் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசால் கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் மிகுந்த சிரமம் இருந்தது.

அக்குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிப்படையாமல் இருக்கும் வகையில், பள்ளிக் கல்வி கற்கும் குழந்தைகள், தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகும், கல்வித் தொலைக்காட்சியை பார்த்து முழுவதும் பயனடையும் பொருட்டும், பள்ளிகள் திறந்தவுடன் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்திட ஏதுவாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மறுவாழ்வு முகாம்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 55 இன்ச் அல்லது 43 இன்ச் ஸ்மார்ட் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவிட ரோட்டரி இண்டர்நேஷனல் சங்கத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு, 43 இலட்சத்து 60 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பீட்டிலான 109 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக ரோட்டரி இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கியுள்ளது. இத்தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒவ்வொரு மறுவாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு மாலை நேரக் கல்வி மைய அறைகளில் நிறுவப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.