14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க NSE சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!

இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமியார் முன்னாள் என்எஸ்ஈ தலைமை செயல் அதிகாரியான ஆனந்த சுப்பிரமணியன் தான் எனச் சிபிஐ தெரிவித்த நிலையில், இன்று இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ விசாரணைக்காகச் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது.

கடந்த வாரம் இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ கடுமையான கேள்விகளைக் கேட்ட நிலையில் சிபிஐ அமைப்பு மிகவும் மேகமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீதிபதி நருக் கேள்வியால் சித்ரா ராமகிருஷ்ணா உடனடி கைது.. சிபிஐ அதிரடி..!

 சித்ரா ராமகிருஷ்ணா

சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவை, 2018ஆம் ஆண்டுத் தேசிய பங்குச் சந்தையில் செய்த பல்வேறு மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலுக்குத் திங்கள்கிழமை டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 14 நாள்

14 நாள்

மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், ராமகிருஷ்ணா ஒரு விஐபி அல்ல என்றும், சிறையில் அவருக்குச் சிறப்பு வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

 வீட்டில் சமைத்த உணவு,
 

வீட்டில் சமைத்த உணவு,

முன்னதாக, சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு வீட்டில் சமைத்த உணவு, பகவத் கீதை மற்றும் சில பேஸ் மார்ஸ் வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் ராமகிருஷ்ணா-வுக்கு மருந்துகள், கண்ணாடி மற்றும் பிரார்த்தனைக்கான புத்தகம் மட்டுமே எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 திகார் சிறை உணவு

திகார் சிறை உணவு

வீட்டில் சமைத்த உணவை குறித்த கோரிக்கைக்கு நீதிபதி, “70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் பலர், திகார் சிறை உணவைச் சாப்பிடுகிறார்கள். நானே திகார் சிறை உணவைச் சாப்பிட்டு உள்ளேன், நன்றாகத் தான் உள்ளது. சிறையில் யாருக்கும் சிறப்பு வசதி இருக்காது.

 விஐபி இல்லை

விஐபி இல்லை

விஐபி கைதிகளுக்கு எல்லா வசதிகளும் தேவை, அவர்களுக்காக சிறையில் விதிகள் மாற்றப்பட வேண்டும். அனைத்து குற்றவாளியும் சட்டத்தின் முன்பு ஒன்று தான். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை எனச் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NSE Chitra Ramkrishna sent 14 days judicial custody till March 28, No special food allowed

NSE Chitra Ramkrishna sent 14 days judicial custody till March 28, No special food allowed 14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க NSE சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!

Story first published: Monday, March 14, 2022, 18:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.