சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு… ஆயுதங்கள் கொடுத்து உதவிய இருவர் பஞ்சாப்பில் கைது!

மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இரண்டு பேர் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ஆற்றில் வீசிச்சென்று இருந்தனர். அந்த ஆற்றில் இரண்டு நாள் தேடுதல் நடத்தி இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதி பாகிஸ்தான் எல்லையையொட்டி இருப்பதால் குற்றவாளிகள் எளிதாக அங்கு பதுங்கிக்கொள்கின்றனர். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் இருந்தாலும் அவனுக்கு நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் அடியாட்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கியால் சுட ஆயுதங்களை கொடுத்து உதவியது பஞ்சாப்பை சேர்ந்த இருவர் என்று கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் லாரன்ஸ் பிஷ்னோய் கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாநாயக், இன்ஸ்பெக்டர் தீபக் சாவந்த் உட்பட தனிப்படை போலீஸார் பஞ்சாப் சென்றனர். அவர்கள் பஞ்சாப்பில் இருந்து சுபாஷ் சந்தர் மற்றும் அனுஜ் தாபன் ஆகியோரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதில் அனுஜ் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் இருந்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறான். இது குறித்து இணை கமிஷனர் லட்சுமி கெளதம் கூறுகையில்,” பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் மும்பை வந்து சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேருக்கும் ஆயுதம் கொடுத்து உதவியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி கூடுதல் தகவல் பெறப்படும்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.