சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இவர்தான் வில்லனா…? அப்போ படம் கொல மாஸ்தா போலையே…!

சிவகார்த்திகேயன்
அடுத்த படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘
டான்
’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர்
அனுதீப்
இயக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தைஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும்
சுரேஷ்
புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகும் இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

சிம்பு முதல் தனுஷ் வரை… சினிமா பிரபலங்கள் அணியும் ஒத்த டீ சர்ட் விலை இவ்வளவா..?

இவர்களுடன்சத்யராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சென்னை, புதுச்சேரி மற்றும் லணடனிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே நடிகர்
பிரேம்ஜி
நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இதில் இன்னும் கூடுதல் தகவலாக சிவகார்த்திகேயனுக்கு பிரேம்ஜி வில்லனாக நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாக உள்ளதால் இந்த காமினேஷன் நிச்சயம் சூப்பர் ஹிட்டடிக்கும் என கூறப்படுகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.