தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந்தைப்படுத்தல் சபை மற்றும் இலங்கையின் தேசிய கைவினை சபை ஆகியவற்றுடன் இணைந்து முதன்முறையாக 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சங்க சந்தையில் இலங்கைத் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

தாய்லாந்திலுள்ள தூதுவர்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களுடன் கலந்து கொண்ட இந்நிகழ்வு, தாய் செஞ்சிலுவைச் சங்கத்தால் dpcredcrossbazaar.com ஊடாக ஹைப்ரிட் தொண்டு வணிக அனுபவத்துடன் ‘மகிழ்ச்சியான ஷொப்பிங் மற்றும் கொடுப்பதில் மகிழ்ச்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ்  ஏற்பாடு செய்யப்பட்டது. 2022 மார்ச் 03ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள சியாம் பாராகனில் உள்ள ரோயல் பாராகான் மண்டபத்தில் தாய்லாந்து இராச்சியத்தின் மாட்சிமை தங்கிய இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்ன் அவர்களால் சந்தை சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.

ஓமி புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் கீழ் ரன்கிரிஸ்ப் மார்க்கெட்டிங் (பிரைவேட்) லிமிடெட், டி என் இன்டீரியர் டிசைன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்., கிரீன்ஸ் ஃப்ளவர் டிசைன் (பிரைவேட்) லிமிடெட், சுரவி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அரோமேடிக் குளோபல் (பிரைவேட்) லிமிடெட், பென்சர்லிங்க் ஸ்பைஸ் எக்ஸ்போர்ட் (பிரைவேட்) லிமிடெட், நோஸ் புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், டி.பி. குளோபல் வென்ச்சர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், எல்.எம். ஸ்பைசஸ், சிலோன் கறி புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தேசிய கைவினை சபையின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து கலப்பின முறையில் கலந்து கொண்டனர். குளோபல் பிரீமியம் வைன் கோ. லிமிடெட் (டில்மா டீ), தாய்லாந்திலுள்ள கே ஸ்கொயர் கோ. லிமிடெட், யூரோ-ஸ்கேன் எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ம்லெஸ்னா (சிலோன்) லிமிடெட் (ம்லெஸ்னா டீ) ஆகியவையும் நிகழ்வின் ஒரு பகுதியாக இணைந்திருந்தன.

 பதவியேற்பு விழாவின் பின்னர், தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும், ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் இலங்கைச் சாவடியில் மாட்சிமை தங்கிய இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்னை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கையின் தேசிய கைவினைக் குழுவினால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய வெள்ளி முலாம் பூசப்பட்ட பகோடாவை வழங்கினர். இலங்கையின் தனித்துவமான சுவையூட்டிப் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் குறித்து தூதுவர் உரையாற்றினார். மாட்சிமை தங்கிய இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்ன் இலங்கைத் தயாரிப்புக்களின் தனித்துவத்தால் ஈர்க்கப்பட்டார்.

கறுவா, கராம்பு, ஏலக்காய், சாதிக்காய், கறிவேப்பிலை போன்ற சிலோன் சுவையூட்டிப் பொருட்களுக்கும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், பட்டிக், பித்தளை, களிமண் மற்றும் மரப் பொருட்கள், காரமான தின்பண்டங்கள், உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பூக்களுக்கும் கூட பாரிய தேவை நிலவியது. சந்தைக்கு முன்னதாக, 2022 பெப்ரவரி 21ஆந் திகதி செய்தியாளர் மாநாட்டில், இலங்கைத் தயாரிப்புக்கள் குறித்து தாய்லாந்து ஊடகங்களுக்கு தூதரகம் விளக்கங்களை அளித்ததுடன், பேங்கொக்கில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சமூகத்திற்கு தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தியது.

 2022 மார்ச் 03 – 06 வரை 53 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற சந்தையில் காணப்பட்ட மொத்தம் 220 சாவடிகளில் 176 வெளிநாட்டுத் தூதரகங்களின் சாவடிகள் 21699 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. தூதரகங்கள், அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தாய் செஞ்சிலுவைச் சங்க நினைவு பரிசுக் கடை ஆகியவற்றிலிருந்து 88க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இணையவழித் தளத்தில் இணைந்திருந்தனர்.

 தூதுவர் கொலொன்ன மற்றும் அவரது கணவரின் வழிகாட்டுதலின் கீழ், சந்தையில் இலங்கையின் பங்கேற்பை வெற்றிகரமாக்குவதற்காக, சுவையூட்டிப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் தலைவி குமுதினி குணசேகர, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி. த மெல், தேசிய கைவினைச் சபையின் தலைவர் சம்பத் எரஹாபொல, தாய்லாந்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமையாளர் தாரக்க கலஹிடியாவ, தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், முதல் செயலாளர் சரித ரணதுங்க மற்றும் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக், தாய்லாந்து
2022 மார்ச் 15

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.