பஞ்சாப் வங்கியில் தமிழக நிறுவனம் ரூ.2060 கோடி மோசடியா? உண்மை நிலவரம் என்ன?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடுத்தடுத்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பஞ்சாப் வங்கியில் ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில் IL & FS நிறுவனமும் இடம் பெற்றுள்ளது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி நிறுவனத்தின் (IL & FS) தமிழக பவர் நிறுவனம், அதன் தமிழக வங்கிக் கணக்கில் 2060 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!

இது குறித்து பஞ்சாப் வங்கி அளித்த புகாரில் இந்திய அரசின் நிதியுதவியில் இயங்கி வரும் ஐ எல் & எஃப் எஸ் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி கடன் வாங்கியிருந்தது.

எவ்வளவு கடன்?

எவ்வளவு கடன்?

ஆனால் கடனை சரியான நேரத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் கடன் தொகை 94000 கோடி ரூபாயாக இருந்தது. குறிப்பாக அந்த நிறுவனத்தின் தமிழக கணக்கு சார்பில் 2060.14 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அதனை சரியான நேரத்தில் நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை எனவும் வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

 அடுத்த மோசடி

அடுத்த மோசடி

இதனையடுத்து தான் பஞ்சாப் வங்கியானது, ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே நிர்வ் மோடி, விஜய் மல்லையா வழக்கில் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ள இந்த வங்கி, இந்த வங்கி 824.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஐ எல் & எஃப் எஸ் மோசடியும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பஞ்சாப் & சிந்த் வங்கயில் நிலுவை
 

பஞ்சாப் & சிந்த் வங்கயில் நிலுவை

முன்னதாக பஞ்சாப் & சிந்த் வங்கி பிப்ரவரி 15 அன்று ஐ எல் & எஃப் எஸ் தமிழ்நாடு பவரின் நிலுவை 148 கோடி ரூபாய் இருப்பதாகவும், இது வாராக்கடன் ஆக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது.

ஐ எல் & எஃப் எஸ் தமிழ்நாடு பவர் என்பது தமிழ் நாட்டின் கடலூரில் அனல் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனமாகும்.

என்ன செய்யப்போகிறது?

என்ன செய்யப்போகிறது?

தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரங்கேறி வரும் மோசடி சம்பவங்களுக்கு மத்தியில், வங்கி எப்படி இதனை கையாளப் போகிறது என்பது பெரும் கேள்வியாகவே இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் வங்கியின் தலைமை மேலாளர் உதவியுடன் 400 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்த மோசடி சம்பவங்களும் வெளியாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil Nadu Power Company Rs 2060 crore fraud in Punjab Bank? What is the real situation?

Tamil Nadu Power Company Rs 2060 crore fraud in Punjab Bank? What is the real situation?/பஞ்சாப் வங்கியில் தமிழக நிறுவனம் ரூ.2060 கோடி மோசடியா? உண்மை நிலவரம் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.