லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றப்படவில்லை! எஸ்.பி.வேலுமணி விளக்கம்…

கோவை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை  என்றும், வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்  என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், எஸ்.பி.வேலுமணி உள்பட பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 80 இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையின் நேற்று அதி காலை முதல் மீண்டும் சோதனை நடத்தினர்.  சுமார் 28 மணி நேரத்திய சோதனையில், கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம், 11  கிலோ கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ்.பி. வேலுமணி கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி,  இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளது. திமுக அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியதுடன், லஞ்ச ஒழிப்பு காவல்துறை,  வருமான வரித்துறை சோதனைகளை சட்ட ரீதியாக சந்திக்க தயார் எனவும் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து, எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான  இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் எந்த ஆவணங்களோ, பணமோ அல்லது நகைகளோ ஏதும் கைபற்றபடவில்லை என்றும், எஸ்.பி.வேலுமணிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற 28 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.