உலக அழகி போட்டியில் அசத்திய அமெரிக்க வாழ் இந்திய பெண்!

ஆண்டுதோறும்
உலக அழகி போட்டி
, பிரபஞ்ச அழகி போட்டி ஆகியவை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் ஒருவகை உத்தியாக இந்தப் போட்டிகளை நடத்தி வருவதாக விமர்சனம் உள்ளது.

இதுபோன்ற விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆண்டுதோறும் தவறாமல் உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான இப்போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகி பட்டத்தை வென்றார். அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீ
சைனி
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கியப் பதவி: ஜோ பைடன் நியமனம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைநதுள்ள போர்ட்டோ ரிக்கோ தீவின் தலைநகரான சான் ஜுவானில் 2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்றுள்ளது. இது 70 ஆவது போட்டியாகும்.

இந்தியா கடைசியாக 2017 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றது. அப்போது மாடலும், நடிகையுமான மனுஷி சில்லர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.