பளபள சருமத்துக்கு பீட்ரூட், கொத்தமல்லி, நெல்லி.. எப்படி சாப்பிடுவது?

பெரும்பாலான மக்கள் தங்கள் சருமம் பளபளப்பாக இருக்க, விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களை நாடுகிறார்கள்.

ஆனால் ஆரோக்கியமான உணவுடன் இணைந்த வைத்தியம்’ ஒருவரின் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய இயற்கை வைத்தியங்கள் ஒருவருடைய சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமின்றி, வளர்சிதை மாற்ற பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது

அற்புதங்கள் நிறைந்த இந்த ஜூஸ், தினமும் புதியதாக தயார் செய்து பருகலாம். ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா பகிர்ந்துள்ள இந்த எளிய ரெசிபியை பாருங்கள்!

தேவையான பொருட்கள்

பீட்ரூட்

கொத்தமல்லி

நெல்லி

* ஒரு மிக்ஸியில் பீட்ரூட், கொத்தமல்லி, நெல்லி மூன்றையும் ஒன்றாக சேர்த்து’ நன்கு அடிக்கவும். ஜூஸ் ரெடி!

பலன்கள்

பீட்ரூட், கொத்தமல்லி மற்றும் நெல்லிக்காய் ஆகியவை இரத்த சுத்திகரிப்புகளாக செயல்படுகின்றன, அதே நேரத்தில் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு நன்றாக வேலை செய்கிறது. இது வடுக்கள், தழும்புகளை அகற்ற உதவுகிறது. மேலும் இயற்கையாகவே உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதன் மூலம் சுருக்கங்களைத் தடுக்கிறது.

இதில் பீட்டாலைன் உள்ளது, இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்பட்ட ஒரு பைட்டோநியூட்ரியண்ட் ஆகும், இது உடலின் தினசரி நச்சு செயல்முறைக்கு அவசியம்.

உடற்பயிற்சிக்கு பின் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் தசை வலி குறைகிறது, வலி குணமடைய உதவுகிறது.

இது செரிமானத்தை மேம்படுத்தவும், அமிலத்தன்மையைத் தடுக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்த அளவைப் பராமரிக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உத வுகிறது.

பிறகென்ன? பளபள சருமத்துக்கு உடனே இந்த ஜூஸ் தயார் செய்து பருகுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.