முதுநிலை பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பு! யுஜிசி தகவல்…

டெல்லி: முதுநிலை கல்வி  படிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும்  நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் புதிய  இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய படிப்புகள் 4 ஆண்டுகாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் படிக்கப்பட வேண்டும். பின்னர் முதுநிலை பட்டப்படிப்பு 2 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால்தான் பிஎச்.டி எனப்படும் முனைவர் படிப்பு படிக்க முடியும்,.

இந்த நிலையில்,  பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி. படிக்க வேண்டுமென்றால் 4 ஆண்டுகளைக் கொண்ட இளநிலை படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது., முதுநிலை பட்டப்படிப்பை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிக்கும் வகையில் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதன்படி,  3 ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத் தேர்வாக 4 ஆண்டுகால படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.

4 ஆண்டுகால இளநிலை படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும் ஆன்லைன் வழியிலும் தொலைதூரக் கல்வி வழியிலும் படிக்கலாம். ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால இளநிலை படிப்பும் அறிமுகமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.