Beast Vs KGF2 குறித்து என்ன சொன்னார் 'ராக்கி பாய்' யாஷ்?

இந்திய சினிமாவின் முன்னணி திரை நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் நடிகர் யாஷ். கடந்த 2018-இல் ‘கே.ஜி.எஃப் – சேப்டர் 1’ மூலமாக புதிய உச்சத்தை அடைந்தவர் அவர். அந்த சினிமா தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. நேற்று அதன் ட்ரைலர் வெளியாகி இருந்தது. 

அதே நேரத்தில் வரும் 13-ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படமும் வெள்ளித்திரைக்கு வருகிறது. இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் – சேப்டர் 2’ ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய் மற்றும் யாஷ் படம் பாக்ஸ் ஆபீஸில் மோதிக் கொள்வது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு யாஷ் கொடுத்த ரிப்ளை பலரது மனங்களை வென்றுள்ளது. 

“இது அரசியல் இல்லை. சினிமா. அதோடு இது கே.ஜி.எஃப் vs பீஸ்ட் கிடையாது. இதனை கே.ஜி.எஃப் மற்றும் பீஸ்ட் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் சார் நிறைய படங்கள் செய்துள்ளார். அவர் எனக்கு சீனியர். நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். நான் நிச்சயம் பீஸ்ட் படத்தை பார்ப்பேன். ‘தளபதி’ விஜயின் ரசிகர்கள் கே.ஜி.எஃப் – 2 நிச்சயம் விரும்பி பார்ப்பார்கள். ரசிகர்கள் இரண்டு சினிமாவையும் பார்க்கட்டும். இந்தியா சினிமாவை கொண்டாடட்டும்” என தெரிவித்துள்ளார் அவர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.