TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு எப்போது? செவ்வாய்க் கிழமை தேதி அறிவிப்பு

TNPSC Group 4 Exam latest Update: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குருப் 2ஏ பதவிகளுக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு மார்ச் மாதம் மத்தியில் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரி தெரிவித்திருந்ததால், குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,

  1. இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  2. தட்டச்சர் (Typist)
  3. சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  5. வரித் தண்டலர் (Bill Collector)
  6. நில அளவர் (Field Surveyor)
  7. வரைவாளர் (Draftsman) ஆகிய பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

அதனால், 2022 மார்ச் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி பேட்டி அளித்ததால், மார்ச் இறுதியே வந்துவிட்டது ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லையே என்று எதிர்பார்த்து காத்திருந்த போட்டித் தேர்வர்களுக்கு நற்செய்தியாக டி.என்.பி.எஸ்சி குரூப் 4 0 வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) வெளியிடுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், போட்டித் தேர்வர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.