அவரால் ஓவரில் 20-25 ரன்களும் எடுக்க முடியும் – ஆயுஷ் பதோனி குறித்து மனம் திறந்த பயிற்சியாளர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அறிமுகப்போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தனது சிறப்பான ஆட்டத்தில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்தியாவில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்று மும்பை வான்கடே ஸ்டெடியத்தில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மொதியது இந்த போட்டியில், லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதில் லக்னோ அணியின் பேட்டிங்கின்போது தொடக்கத்திலேயே விக்கெட் சரிவை சந்தித்த நிலையில், 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய 22 வயதான இளம வீரர் ஆயுஷ் பதோனி, அனுபவ வீரரைபோல் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. அதுவும், உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான், மிதவேக பந்துவீ்சாளரான ஹர்த்திக் பாண்டியா, லூக்கி பெர்கூசன் ஆகியோரின் பந்துவீச்சில் இவர் அடித்த ஷாட் அனைவரையும் மிரள வைத்தது.

இந்நிலையில், படோனியின் பேட்டிங்கை பஞ்சாப்பில் இருந்து ரசித்தக்கொண்டிருந்த அவரது சிறுவயது பயிற்சியாளர் பால்ராஜ், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஃபைன்லெக் திசையில் அடித்த ஷாட்டை ரசித்ததாக கூறியுள்ளார். இந்த ஷாட்டை “அவர் 9 வயதில் இருந்து விளையாடுவார்! என்று கூறியுள்ளார். ஆயுஷின் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சில நிமிடங்களில் குஜராத் அணிக்கு எதிரான முதல் அரைசத்தை பதிவு செய்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காக உலகக் கோப்பை தொடரின் முன்னாள் நாயகனான ஆயுஷ் படோனி, நேற்று விளையாடிய முக்கியமாக மூன்று ஷாட்கள் தனித்து நிற்கின்றன, இந்த ஷாட்டை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் மீண்டும் மீண்டும் ஹாட்ஸ்டார் பக்கம் சென்று கொண்டிருக்கின்றனா. ஒரு உயர்தர சுழற்பந்து வீச்சாளர், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு மிகவேகபந்து வீச்சாளர்களுக்கு ஒரு அறிமுக வீரராக களமிறங்கிய நெருக்கடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆயுஷ் படோனியின் சிறுவயது பயிற்சியாளர் பால்ராஜ், தனது மனம் கடந்த காலத்திலிருந்தும் தற்போது நிகழ்காலத்திலிருந்தும் தொடர்ச்சியான சில படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று ஆயுஷ் 14 வயது இருக்கும் போது அவரது வீட்டில் நடந்த ஒரு இரவின் உணர்வுபூர்வமான படம். அவரின் 14 வயதில், முச்சதம் அடித்த போதிலும், அடுத்த ஆண்டு 16 வயதுக்குட்பட்டோருக்காக தேர்வு செய்யப்படவில்லை

இதனால் ஆயுஷ் முற்றிலும் சிதைந்து போனான். இப்போது நான் என்ன செய்ய முடியும் என்று பலமுறை தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.  மாலை நேரப் பயிற்சியின் போது, ​​ பலமுறை ஆயுஷ் தனது கோபத்தையும் விரக்தியையும் காட்டுவதற்காக பந்தை மிகவும் கடினமாக எதிர்கொண்டு விளையாடினார். அப்போது ஒரு வார்த்தை கூட பேசாமல், தான் பந்து வீசிக்கொண்டே இருந்ததாக பால்ராஜ் கூறியுள்ளார்.

அதன்பிறகு ஒருநாள் நள்ளிரவில் பேசிக்கொண்டிருக்கும்பொது “ஆயுஷ் முச்சதத்தில் ஒன்றுமில்லை சார்?” என்று கூறியுள்ளார். அதற்கு பால்ராஷ் அப்படியானால், வெறும் 100 தான் உங்கள் வாழ்க்கை? நீங்கள் விட்டுவிடுவீர்களா? நாளை முதல் இரட்டை சதம் அடிக்க பயிற்சி செய்வோம் என்று கூறியதாக நினைவு கூர்ந்துள்ளார்.

அதன்பிறகு அணியில் இடம்பெற்ற அவருக்கு ஏதாவது ஒரு வீரர் காயம் காரணமாக வெளியேறினால் அந்த இடத்தில் ஆயுஷுக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒருநாள் ஹரியானாவுக்கு எதிராக ரோஹ்தக்கில் நடைபெற்ற போட்டியில் வாய்ப் கிடைத்தது. அந்த பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆனாலும், , அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த போட்டியில் அவர் அவுட் ஆனபோது, அவரது தந்தை உடனடியாக அழைத்து, அவர் வெளியே வராமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். ஆனால் நான் அவரிடம், “இல்லை இல்லை.. உங்கள் மகன் அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாடுவதில்லை. எப்போதும் அணிக்காகதான் விளையாடுவார். நாட் அவுட் என்பதனால் என்ன பயன்?  ஒரு சிக்ஸ அல்லது ஃபோர் வந்தால் அணிக்கு நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அதன்பிறகு “வங்கதேசத்தில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக அவர் ஒரு ஓவரில் நான்கு சிக்சர்களை அடித்தார்.  இது தொடர்பாக ஒரு நேர்காணலில்,, ஆயுஷ் தனது மனதில் ஒரு கட்டத்தில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடிக்க விரும்பினார், ஆனால் அது முடியாமல் போனது. “நான் இப்போது அவரைப்பற்றி அதிகமாக பேசுவது போல் தோன்றலாம், ஆனால் ஐபிஎல் மற்றும் அதற்கு அப்பால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் அவருக்கு உள்ளது. அவரால் ஒரு ஓவரில் 20-25 ரன்களும் எடுக்க முடியும். பொறுத்திருந்து பாருங்கள்!

பால்ராஜ் போன்று இந்திய கிரிக்கெட்டில் பல கேரக்டர்கள் நிரம்பியுள்ளன, அதே சமயம், பயிற்சியாளர்கள் அனைவரும் கடினமான வேலைகளையும் அமைதியாகச் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு பரோடாவில் ஒன்று உள்ளது, மயங்க் அகர்வாலுக்கு பெங்களூரில் ஒன்று உள்ளது, அவர்கள் இன்னும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைக்காக தங்களது பயிற்சியாளர்களிடம் திரும்புகின்றனர்.

“ஒரு நாள் அவரது தந்தை என்னை வீட்டிற்கு அழைத்தபோது எங்கள் உறவு மாறியது எனக்கு நினைவிருக்கிறது. ஆயுஷின் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். அவரது வீடு பள்ளிக்கு எதிரே இருந்தது, கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான தீப்பொறி அவரது மகனுக்கு இருப்பதாக நான் ஏற்கனவே அவரது தந்தையிடம் கூறி இருந்தேன். ஆனால் அவர் நாங்கள் வெறும் நடுத்தரக் குடும்பம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஆசிரியையான அவரது தாயார், ஆயுஷ் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினார். சிறு குழந்தை எப்படி கிரிக்கெட் அமைப்பிற்குள் நுழையப் போகிறார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கனவுகள் கூட புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும், எங்களில் பல இந்தியர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் பால்ராஜ் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்ததாக கூறியுள்ளார்.“பொதுவாக இளம் குழந்தைகள் சச்சின் அல்லது டிராவிட் அல்லது சில பெரிய வீரரை போல் ஆகவேண்டும் என்று ஆசையுடன் இருப்பார்கள். ஆனால் ஆரம்பம் முதலே ஆயுஷ் தான் நானாக இருக்க வேண்டும். எனது ஆட்டத்தை வித்தியாசமாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர். அவருககான சிறந்த நேரமும் இருந்தது. ஆனால்  அவரது தந்தைக்கு ஆயுஷ் மேல் நம்பிக்கை வராத நிலையில், பள்ளியில் இவ்வளவு குறுகிய பயிற்சி நேரம் எப்படி மாறப்போகிறது என்று யோசித்துள்ளார். அப்போது ​ வீட்டு மொட்டை மாடியில் ஒரு பிட்ச் தயார் செய்து “சிமென்ட் பாதையில் சுவரைச் சுற்றி வலைகளை அமைத்தேன்.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும், நாங்கள் மணிக்கணக்கில் அந்த பிட்சில் இருந்தோம். பெரும்பாலும் நான் அவர்கள் வீட்டில் தான் தூங்குவேன். நான் பஞ்சாப் திரும்பினாலும் ஆயுஷ்க்கு தொடர்ந்து பந்தை எறிந்து கொண்டே இருக்கும்படி தந்தையிடம் சொல்லி சென்றேன். ஆயுஷ் பெரியவராகவும் தீவிரமாகவும் ஆக, அவர் தனது கிரிக்கெட் பயிற்சியை சோனட் கிரிக்கெட் அகாடமியில் புகழ்பெற்ற பயிற்சியாளர் தாரிக் சின்ஹாவுடன் சேர்த்துவிட்டார். ஆனாலும் தற்போதுவரை ஆயுஷ் பால்ராஜுடன் தொடர்பில் இருக்கிறார்.

“ஆயுஷ் அதிகம் பேசவோ சிரிக்கவோ மாட்டார்! தாரிக் சின்ஹா ​​கூட ஒருமுறை என்னிடம், ஆயுஷ் தான் விரும்பியதைச் செய்கிறார்!)’ என்று சொன்னார். அவனுடைய அத்தைகள் கூட என்னிடம், ‘அவர் ஏன் நம்மிடம் அதிகம் பேசுவதில்லை!’ என்று கேட்டிருக்கிறார்கள்,  நான் அதை ஒரு சிறப்பு வீரரின் கவனம் மற்றும் மனநிலையாக பார்க்கிறேன். எல்லோருக்கும் அது இல்லை;. ராகுல் டிராவிட் முதல் சின்ஹா ​​சார் வரை பல பெரிய பெயர்களுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்,

மேலும் அவர் தனது விளையாட்டுக்கு ஏற்றதாக கருதுவதை மட்டும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வார்,  அதேபோல் தனக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர், பிடிவாதமான கவனத்துடன் அதைச் செய்வார். இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி உச்சத்திற்கு வருவார் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.