பீஸ்ட் படத்தில் இருக்கும் அந்த விஷயம்.. ரசிகர்ளுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..!

விஜய்
நடிப்பில்
நெல்சன்
இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவான திரைப்படம்
பீஸ்ட்
.
அனிருத்
இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்
பூஜா ஹெக்டே
நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

நெல்சனின் டார்க் காமெடி மற்றும் விஜய்யின் கமர்ஷியல் பார்முலாவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் கதை ஒருநாள் இரவில் நடப்பதுபோன்றும் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும் இப்படி ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

திடீரென நெல்சனுக்கு நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்..காரணம் இதுதான்..!

இருப்பினும் இந்த தகவல் எல்லாம் வெறும் வதந்தியா இல்லை உண்மையா என்று படம் வந்ததற்கு பிறகுதான் தெரியும். இந்நிலையில் கடந்த மாதம் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலான நிலையில் தற்போது ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.

பீஸ்ட்

இதைத்தொடர்ந்து இப்படம் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்திலிருந்து டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதைப்பற்றி படக்குழு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்குமென்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடலை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் மேலும் ஒரு பாடல் இருப்பதாக பேசப்படுகின்றது. அப்பாடல் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் என்றும் தகவல் வருகின்றது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் நாளை என்று ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். எனவே நாளை பீஸ்ட் படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

அடுத்த செய்திஅந்த இடத்துல கூடவா கம்மல் போடுவாங்க..?: வைரலாகும் யாஷிகாவின் வீடியோ..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.