FedEx புதிய சிஇஓ-வான ராஜ் சுப்ரமணியம்.. யார் இவர்..?

அடோபி தொடங்கிக் கூகுள், மைக்ரோசாப்ட், டிவிட்டர் வரையில் பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியர்கள் கையில் வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான FedEx நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம்-க்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்!

FedEx நிறுவனம்

FedEx நிறுவனம்

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் கொரியர், ஈகாமர்ஸ், பிற சேவை துறையில் 1971ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 6,00,000 ஊழியர்கள் உடன் இயங்கும் FedEx அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செய்து வருகிறது.

ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித்

ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித்

இந்நிலையில் FedEx நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வான ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித், ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்தப் பதவியில் இருந்து விலகும் நிலையில், அடுத்தது இப்பதவியில் யார் என்பது அனைவருடைய கேள்வியாக இருந்த நிலையில், ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித் இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் பெயரை அறிவித்துள்ளார்.

ராஜ் சுப்ரமணியம்
 

ராஜ் சுப்ரமணியம்

ராஜ் சுப்ரமணியத்தின் திறமையான தலைவர் ஃபெடெக்ஸை மிகவும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று ஸ்மித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுப் பணி

30 ஆண்டுப் பணி

ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸை நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுக் காலம் பல முக்கிய வர்த்தகம், சேவை பிரிவுகளில் உயர் பதவியில் பணியாற்றியுள்ளார். அனைத்திற்கும் மேலாக இவர் ஒரு இந்தியர் என்பதில் கூடுதல் பெருமை.

கேரளா

கேரளா

 

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ் சுப்ரமணியம், இவர் தற்போது FedEx நிறுவனத்தின் குளோபல் தலைமையும் அமைந்துள்ள டென்னசி மாநிலத்தின் உள்ள மெம்பிஸில் வசித்து வருகிறார்.

ஐஐடி பாம்பே

ஐஐடி பாம்பே

அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கும் பிற இந்தியர்களைப் போலவே ராஜ் சுப்ரமணியமும் ஐஐடி கல்லூரியில் படித்தவர் தான். 1983-1987ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஐஐடி பாம்பே-வில் இரசாயனப் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

அமெரிக்கக் கல்வி

அமெரிக்கக் கல்வி

அதைத் தொடர்ந்து சைராகஸ் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் MBA முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1996 முதல் FedEx நிறுவனம்

1996 முதல் FedEx நிறுவனம்

1991ஆம் ஆண்டு MBA பட்டம் பெற்ற ராஜ் சுப்ரமணியம் 1996ஆம் ஆண்டில் FedEx நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவில் தலைவராகத் தேர்ந்தார், அதன் பின்பு படிப்படியாகப் பல்வேறு உயர் பதவிகளில் இருந்தார். கடைசியாக FedEx கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். தற்போது தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian American Raj Subramaniam named new CEO of FedEx; Who is Raj Subramaniam..?

Indian American Raj Subramaniam named new CEO of FedEx; Who is Raj Subramaniam..? FedEx புதிய சிஇஓ-வான ராஜ் சுப்ரமணியம்.. யார் இவர்..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.