அடி தூள்…. யப் டிவியில் டாடா ஐபிஎல் 2022 திருவிழா| Dinamalar

உலகில் எவ்வளவோ நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவிலும் நடக்கும் ஐபிஎல்., போட்டிகள் என்று சொல்லுவதை விட திருவிழாவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். 2022ம் ஆண்டுக்கான டாடா ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 முதல் துவங்கி உள்ளன.

இந்நிலையில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ‘யப்’ டிவி, டாடா ஐபிஎல் 2022 போட்டிகளை 99 நாடுகளில் நேரலையில் வழங்குவதற்கான உரிமையை தெடாடர்ந்து 5வது முறையாக பெற்றுள்ளது. மார்ச் 26 முதல் மே 29 வரை நடக்கும் இந்த போட்டிகளை யப் டிவி வாடிக்கையாளர்கள் தங்களின் அபிமான கிரிக்கெட் அணியினை வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

இந்தாண்டு ஐபிஎல், திருவிழாவில் ஏற்கனவே உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி கேப்பிட்டல்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுடன் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் களமிறங்கி உள்ளன.

இதுப்பற்றி யப் டிவி நிறுவனர் மற்றும் சிஇஓ உதய் ரெட்டி கூறுகையில் “எப்போதுமே கிரிக்கெட்டிற்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இதை விட அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கிரிக்கெட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், உலகெங்கிலும் உள்ள 99 நாடுகளுக்கு ஸ்ட்ரீமிங் தளமாக நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சர்வதேச லீக்குகளைப் பொறுத்தமட்டில் இந்தியாவை உலக வரைபடத்தில் வைக்கும் விளையாட்டின் தடையற்ற, நிகழ்நேர ஸ்ட்ரீமிங்கை எங்கள் தளம் தொழில்நுட்பம் ஆதரிக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றார்.

“உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கத்துடன் உலகளாவிய இந்திய புலம்பெயர்ந்த மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் யப் டிவி உடனான எங்கள் நீண்டகால தொடர்பை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். டாடா ஐபிஎல் 2022 அதன் தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய மற்றும் மிகவும் உற்சாகமான பதிப்பாக இருக்கும்” என்கிறார் டிஸ்னி ஸ்டார், ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தின் சிண்டிகேஷன் தலைவர் ஹாரி கிரிபித்.

இந்த முறை போட்டிகள் இந்தியாவில் உள்ள வான்கடே, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மைதானங்களில் நடக்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கின்றன.

ஐபிஎல் போட்டிகள் யப் டிவியின் பின்வரும் பிராந்தியங்களில் ஒளிபரப்பாகிறது. அதன் விபரம் வருமாறு….

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய கண்டம், தென் கிழக்கு ஆசிய நாடுகள் (சிங்கப்பூர் தவிர்த்து), மலேசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், இலங்கை, பாகிஸ்தான், ஜப்பான், நேபாள், பூட்டான் மாலத்தீவு.

யப் டிவி பற்றி….

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ‘யப்’ டிவி, 14 மொழிகளில் 250க்கும் அதிகமான டிவி சேனல்கள், 3000க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

யப் டிவி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் தெற்காசிய மக்களுக்கான நம்பர் 1 இன்டர்நெட் பே டிவி பிளாட்பார்ம் மற்றும் இந்தியாவில் பிரீமியம் உள்ளடக்கம் கிடைப்பதன் மூலம் மிகப்பெரிய இன்டர்நெட் டிவி தளமாக உள்ளது. யப் டிவி என்பது இந்திய ஸ்மார்ட் டிவி பயன்பாடாகும். மேலும் இது 13 மில்லியன் மொபைல் பதிவிறக்கங்களைப் பெற்று, 4.0 பயனாளர்களின் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

மேலும் தகவலுக்கு https://www.yupptv.com/cricket ஐ காணவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.