தென்னிந்திய சினிமா கருத்தரங்கு: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திரைத்துறை சாதனையாளர்கள், ஆளுமைகள், பிரபலங்கள் பங்குகொள்ளும் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின், கருத்தரங்கு வருகிற ஏப்ரல் 09 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் டி.ஜி. தியாகராஜன், வழிநடத்தல் குழு உறுப்பினர்களான சுஹாஷினி மணிரத்னம், குஷ்பு சுந்தர், சுஜாதா விஜயகுமார், லிஸ்ஸி லக்ஷ்மி, ஜி.தனஞ்செயன் கலந்து கொண்டனர்.

அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய திரையுலகு ஊடகத்துறையில் மட்டும் 55 லிருந்து 70 பில்லியன் வரை வருமானம் 2020 – 22 ஆண்டுகளில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன், வீடியோ கேமிங் துறைகளையும் சார்ந்தது. தொலைக்காட்சி ஊடக துறையில் இந்தியாவில் தென்னிந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. தென்னிந்திய மீடியா என்றால் எல்லோரும் திரைத்துறையை மட்டுமே என நினைக்கிறோம். ஆனால் அதை தாண்டி மிகப்பெரும் துறைகள் இருக்கிறது. அனிமேசன், வீடியோ கேமிங், ஓடிடி என பெரிய உலகம் இருக்கிறது.
இதனை பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் தான் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, வட இந்தியாவில் இதை போல் பல நிகழ்வுகளை நடத்துகிறது.

ஒரு இடத்தில் திரைத்துறை விழா நடக்கும் போது அங்கு பிரபலங்கள் வருவதும், வெளிச்ச மழை பொழிவதுமான விழா இதுவல்ல, ஒரு திரைப்படைப்பு எப்படி நடக்கிறது, அதன் நோக்கம் என்ன, அதனை எப்படி திட்டமிடுகிறார்கள், ஒரு படைப்பை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படி உருவாக்குகிறார்கள், என்பது தான் இந்த நிகழ்வின் முக்கிய சாராம்சம் ஆகும்.

திரைக்கல்லூரியில் படித்தவர்கள் அங்கு வரும் ஆளுமைகளிடம் திரைத்துறை பற்றி கற்றுக் கொள்வார்கள். ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை, அதனை அனைவருக்கும் எடுத்து செல்லும் தளம் தான் இது. முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவினை துவக்கி வைக்கிறார். ஜெயம் ரவி, பகத் பாசில், சிவராஜ்குமார், எஸ் எஸ் ராஜமவுலி, இயக்குநர் மணிரத்னம் இந்த துவக்க விழாவில் பங்கு கொள்கிறார்கள்.

தென்னிந்திய திரைத்துறை, பான் இண்டியா திரைப்படத்தை தருவது பற்றி கருத்தரங்கு நடக்கும். இதில் இயக்குநர் மணிரத்னம், எஸ் எஸ் ராஜமவுலி, சுகுமார் ஆகியோர் பங்குகொள்ள, தொகுப்பாளிணியாக அனுஹாசன் பங்கு பெறுகிறார்.

வருங்கால திரை ஊடகம் பற்றிய கருத்தரங்கு ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் , கலை இயக்குநர் சாபு சிரில், ஶ்ரீனிவாச மோகன் விஷுவல் எபெக்ட் துறை மேலாளர், இந்திய கேமிங் துறை சார்ந்த ரோலின் லாண்டஸ் பங்கு கொள்கிறார்கள். ஊடக துறையில் பாலினம் குறித்து கருத்தரங்கு, ரம்யா ரீமா கலிங்கல், டாப்ஸி பன்னு பங்குகொள்கிறார்கள்.

2012 இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கு நடைபெற்றது. அதற்கு பிறகு 9 ஆண்டுகளாக இது நடைபெறவில்லை. இப்போது இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. என்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.