மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம்

புதுச்சேரி : மின்துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் என்.டி., மகாலில் நாளை நடக்கிறது.மின்துறை நகரப்பகுதி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி மின்துறை நகர கோட்டம், வெங்கட்டா நகர், முத்தியால்பேட்டை, சாரம் பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்துறை சம்பந்தமான தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள குறை தீர்ப்பு முகாம் நடக்க உள்ளது.

நாளை 1ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, நுாறடி சாலை என்.டி. மகாலில் மின்துறை குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது.மேற்கூறிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு மின் துறை சம்மந்தமான குறைகள் இருப்பின் இம்முகாமில் பங்கேற்று நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.