நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையானால் உலக வரைபடமே 2022இல் மாறும்

Nostradamus Predictions for 2022: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.  2022ஆம் ஆண்டில் ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன.

நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் 2022: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு மாத காலமாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படுகின்றன. போர் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்ய-உக்ரேனியப் போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.

2020ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் இதுதான் நிலை என்று ஆரூடம் சொல்கிறார் பிரபல ஜோதிடர். உலக புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் பல கணிப்புகளைச் செய்தார்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவு

2022ம் வருடம், உலகிற்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும்,  கதிர்வீச்சினால் உலகின் தட்பவெப்ப நிலை மாறி பிரம்மாண்டமான பனிப்பாறைகள் உருகும் என்றும் கணிக்கிறார் பிரெஞ்சு பிரபல ஜோதிடர்.

இதனால் உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும். கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணமடைவார்கள், எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு கவலைகளை அதிகரிக்கின்றன.  

பல நாடுகளில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன
நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவாக நோஸ்டாடாமஸின் கருத்து இருந்தாலும், சுதந்திரத்தை பராமரிப்பது முக்கியம் என்று கூறினார்.  

 

நோஸ்ட்ராடாமஸ் அழிவை முன்னறிவித்தார்
தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பதட்டங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. உலகம் முழுவதும் அழிவு நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறது. நோஸ்ட்ராடாமஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே பேரழிவைப் பற்றி எச்சரித்திருக்கலாம்.

போரின் உண்மையான நிலைமை என்பது ரஷ்யா, சீனா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நிலைமையைப் பொறுத்தது. சீனாவும் ரஷ்யாவும் எதிர்காலத்தில் வல்லரசுகளாக உருவாகும் என்று கணிக்கிறார் நோஸ்ட்ராடாமஸ். 

 

இந்த கணிப்பு உண்மையாக இருந்தால், உலகம் மாறும். கம்யூனிஸ்ட் ஆட்சி கொண்ட இரண்டு நாடுகளின் ஆதிக்கம் உலகில் அதிகரிக்கும். அவை வல்லரசுகளாக மாறினால் உலகின் பிற பகுதிகளும் பாதிக்கப்படலாம்.  
நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் உண்மயானது. 

ஊடக அறிக்கையின்படி, நோஸ்ட்ராடாமஸ் தனது புத்தகத்தில் 17வது பிரெஞ்சு புரட்சி பற்றி எழுதியுள்ளார். இரண்டாம் உலகப் போரையும் கணித்தார் என்பதால், அவரது இந்த ஆரூடமும் மெய்த்துவிடும் என்று கூறப்படுகிறது. நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு சர்வதேச அளவில் அவ்வப்போது பிரபலமாவதும், முக்கியமான நிகழ்வுகள் வரும்போது ஒப்பிட்டு பார்ப்பதும் வழக்கமானதே.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.