மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய மாவட்ட கலெக்டர்| Dinamalar

பத்தனம்திட்டா: கேரளாவில் பல்கலை. நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளுடன் மாவட்ட பெண் கலெக்டர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநில் பத்தனம்திட்டம் மாவட்டத்தில் உள்ளது மகாத்மா காந்தி பல்கலை. இப்பல்கலை. மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று நடந்த நடன ஒத்திகையை பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் பார்வையிட வந்தார். அப்போது மாணவிகளின் நடனத்தை கண்டு ரசித்தவர் தானும் சேர்ந்த நடனமாடி மகிழ்ந்தார். இதனை அங்கிருந்தவர்கள் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.