'அந்த' சம்பவத்திற்கு பிறகு அடங்கிப் போன விஜய்? ஆடியோ லாஞ்ச் நடத்தப்படாததன் பரபர பின்னணி!

நெல்சன் இயக்கத்தில்
விஜய்
மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம்
பீஸ்ட்
. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செலிபிரேஷன் மூடில் உள்ளனர்.

பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த மாதமே நடத்தப்படும் என தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் படக்குழு அதுகுறித்து வாயே திறக்கவில்லை. இருப்பினும் ஆடியோ லாஞ்ச் நடத்தப்படாமல் போனது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்றும் அந்த பாடல்களும் சிங்கிள் ட்ராக்காக வெளியாகிவிட்டாதால் தனியாக ஆடியோ லாஞ்ச் வேண்டாம் என படக்குழு முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது உதயநிதிக்கு பிடிக்காததும் காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான
பிஸ்மி
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்
பீஸ்ட் ஆடியோ லாஞ்ச்
நடத்தப்படாமல் போனது ஏன் என தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி, பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் நடத்தப்படாததற்கு காரணம் விஜய்தான் என்றும், மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடத்தப்பட்ட ஐடி ரெய்டுக்கு பின்னர் விஜய் அமைதியாகி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு எந்தப்பிரச்சனைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆடியோ லாஞ்ச் நடத்தினால் அரசியல் பேச வேண்டும், அரசியல் பேசினால் பாஜகவால் பிரச்சனை வரும் என்றும் பேசாவிட்டால் விஜய் பயந்துவிட்டார் என்று கூறுவார்கள் என்பதால் விஜய்யே ஆடியோ லாஞ்சை புறக்கணித்திருக்கலாம் என கூறியுள்ளார்.

அடுத்த செய்திநடிகையை கொன்று உடலை துண்டுதுண்டாய் வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த காதலர்… நடுங்க வைக்கும் சம்பவம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.