வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!

WhatsApp அதன் பயனர்களுக்கு அரட்டை அனுபவத்தை மேம்படுத்த 6 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம்
வாய்ஸ் மெசேஜ்
வசதியில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த புதிய அம்சங்கள் பயனர்களுக்கு முன்பை விட வாய்ஸ் மெசேஜ் அனுப்புதல் மற்றும் பெறுதல் போன்ற செயல்பாடுகளில் சிறந்த அனுபவத்தை வழங்கும்.

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் வசதியில் மொத்தம் 6 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Out of chat playback, Pause and resume recording, Waveform visualization, Draft preview, Remember playback, Fast playback on forwarded messages ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும். இப்போது ஒவ்வொரு அம்சங்களை குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அரட்டைக்கு வெளியே வாய்ஸ் மெசேஜ் (Out of chat playback)

வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயனர்கள் பெரிதும் விரும்புவார்கள். வாய்ஸ் மெசேஜை அரட்டையில் இருந்து வெளியேறிய பின்னரும் கேட்க முடியும். அதாவது, வேறு வேலைகளை ஸ்மார்ட்போனில் செய்து கொண்டே, வாய்ஸ் மெசேஜ்களை கேட்க இந்த அம்சம் அனுமதிக்கிறது. மேலும், நோட்டிபிகேஷனில் தெரியும் வாய்ஸ் மெசேஜை, அதிலிருந்தே ப்ளே செய்து கேட்க முடியும்.

இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!

Pause and Resume Recording

இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் குரல் செய்தியை பதிவு செய்யும் போது அதை நிறுத்திவிட்டு அதே இடத்தில் இருந்து மீண்டும் தொடர முடியும். குரல் செய்தி பதிவின் போது ஏற்படும் இடையூறு காரணமாக முழு செய்தியையும் மீண்டும் பதிவு செய்வதிலிருந்து இந்த அம்சம் பயனர்களை காக்கிறது. மல்டி டாஸ்கிங் செய்வோருக்காகவே இந்த புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவியுள்ளது.

அலைவடிவ காட்சிப்படுத்தல் (Waveform visualization)

அலைவடிவக் காட்சிப்படுத்தல் பயனர்களுக்கு ஒலியின் காட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்கும். இது பயனர்களுக்கு பதிவு செய்வதற்கு பெரிதும் உதவும். பிரீமியம் வாய்ஸ் ரெக்காடரில் உள்ளது போல, நீங்கள் தெளிவான ஒலியை இதில் பதிவு செய்து அனுப்ப முடியும். உங்கள் ஒலியில் இடையூறுகள் இருந்தால் அலைவடிவ காட்சியில் தெளிவாகத் தெரிந்துவிடும்.

வாய்ஸ் மெசேஜ் முன்னோட்டம் (Draft preview)

இதேபோல், ஒரு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்டிங் செய்துவிட்டு அப்படியே அனுப்பத் தேவையில்லை. நீங்கள் கூற விரும்பும் தகவல் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை, இந்த அம்சத்தின் உதவியுடன் கேட்கலாம். ஒன்றுக்கு இருமுறை பிரிவீவ் பார்த்துவிட்டு வாய்ஸ் மெசேஜுகளை அனுப்பலாம்.

பின்னணி நினைவு (Remember Playback)

நீங்கள் ஒரு வாய்ஸ் மெசேஜை கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், அதை இடைநிறுத்தி விட்டு வேறு வேலையை பார்க்கச் சென்றீர்கள் என்றால், மீண்டும் நீங்கள் உரையாடலுக்கு வரும்போது நீங்கள் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடர இந்த அம்சம் அனுமதிக்கிறது.

இத மட்டும் செய்யாதீங்க – முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!

முன் அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜுகளை வேகமாக இயக்குதல் (Fast playback on forwarded messages)

இந்த அம்சத்தின் மூலம், அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜுகளை பாஸ்ட் பார்வேட் செய்து கேட்கலாம். பயனர்கள் 1.5x மற்றும் 2x வேகத்தில் குரல் செய்திகளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.

அடுத்த செய்திஜியோவைத் தொடர்ந்து Airtel வெளியிட்ட 30 நாள் வேலிடிட்டி திட்டம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.