அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவி; ஜோ பைடன் பரிந்துரை

வாஷிங்டன், 
அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீடிக்கிறது. இப்போது 2 முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டக்கல், சம வேலை வாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட வினய் சிங், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமை நிதி அதிகாரி ஆகிறார். கல்பனா கோட்டக்கல் பன்முகத்தன்மை கொண்டவர், சட்ட நிபுணர் ஆவார். மனித உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் கொடுத்து, உரிமையற்றவர்களை பிரதிநிதிப்படுத்துபவர் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
வினய் சிங்கைப் பொறுத்தமட்டில், சான்றளிக்கப்பட்ட ஆடிட்டர் ஆவார். நிதி மற்றும் மூலோபாய துறைகளில் கால் நூற்றாண்டு அனுபவம் மிக்கவர் ஆவார். ஒபாமா, ஜோ பைடன் நிர்வாகங்களில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.