ஆந்திராவில் 15 லட்சம் பக்தர்கள் மத்தியில் 15-ந்தேதி ராமர், சீதா கல்யாண உற்சவம்

திருப்பதி :

ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்ட பின்பு பத்ராசலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று விட்டது.

இதனால் கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் வசம் எடுத்துக் கொண்டது. ரூ.63 கோடி செலவில் சீரமைத்து, அங்கு நித்திய பூஜைகள், உள்ளிட்டவற்றை செய்து வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. தற்போது கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தில் வருகிற 15-ந் தேதி சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெறுவதால் தேவஸ்தானம் 15 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் அதை நடத்த முடிவு செய்துள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடந்து வருகிறது. திருக்கல்யாணத்துக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

மேலும் தாளபாக்கத்தில் உள்ள 108 அடி உயரமுள்ள அன்னமாச்சாரியார் திரு உருவத்தின் கீழ் ஏழுமலையான் கோவில் கட்டவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.