இதுதான் உங்க ட்விஸ்ட்டா..?: யாஷிகாவை கண்டமேனிக்கு கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த
யாஷிகா ஆனந்த்
, தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தளபதி கொல மாஸ்… தீயா இருக்கே: அதிரடியாக வெளியான ‘பீஸ்ட்’ டிரெய்லர்..!

இந்நிலையில் உடல்நிலை சரியாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பினார் யாஷிகா. தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா, நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு லவ் எல்லாம் செட்டாகாது, திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் எனவும் பதிவு செய்திருந்தார்.

Yashika Insta Story

இந்நிலையில் இன்று தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விட்டடேன் என பதிவிட்டுள்ளார். மேலும் திருமணம் பற்றி திட்டமிட இன்னும் 10 வருடங்கள் ஆகும் எனவும் யாஷிகா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் உங்க ட்விஸ்ட்டா..? இது எங்களுக்கு நேத்தே தெரியும் என யாஷிகாவை கலாய்த்து வருகின்றனர்.

நெல்சன் போட்ட ஒரு ட்வீட்.. தலைவருக்கா? தளபதிக்கா?

அடுத்த செய்திதளபதி கொல மாஸ்… தீயா இருக்கே: அதிரடியாக வெளியான ‘பீஸ்ட்’ டிரெய்லர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.