‘பீஸ்ட்’ ட்ரெய்லர் ரிலீஸ் – ரோகிணி தியேட்டரில் குவிந்து அதகளம் பண்ணிய விஜய் ரசிகர்கள்

‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டை, 2 ஆயிரத்திற்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் சென்னை ரோகிணி திரையரங்கில் கொண்டாடினர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியான 2 பாடல்களும் யூ-டியூப் தளத்தில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை வெளியானது. சென்னையில் மால் ஒன்றை தீவிரவாதக் கும்பல் ஹைஜாக் பண்ணியிருப்பதும், அந்த தீவிரவாத கும்பலை விஜய் துவம்சம் செய்வது போன்றும் ட்ரெயிலர் வெளியானது.

image

இதற்கிடையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் யூ- டியூப் சமூக வலைதளத்தில் வெளியானநிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு குவிந்தனர்.

image

மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் திரையிடப்பட்டது. அதை அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடினர். இதனால் ரோகிணி திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.