'மணி ஹெய்ஸ்ட்' பட்டி டிக்கரிங்கா..?: 'பீஸ்ட்' பட டிரெய்லரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!


பீஸ்ட்
‘ படத்தின் டிரெய்லர் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வரும் இந்த டிரெய்லர் குறித்து சில நெகட்டிவ் கமெண்ட்களும் வந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
.

சன் பிக்சர்ஸ்
தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் அதிரடி ஆக்ஷன் மற்றும் விஜய்யின் ஸ்டைலில் டிரெய்லர் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கி கொள்ளும் மாலில் உள்ள மக்களை காப்பாற்றும் இராணுவ அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்துள்ளார் விஜய். மேலும் டிரெய்லரில் மிக கம்மியான வசனங்களே விஜய் பேசியிருந்தாலும், அனைத்தும் அரசியல் சம்பந்தமான வசனமாக உள்ளது.

யாருக்கு இந்த வார்னிங் விஜய்..?: அனல் பறக்கும் அரசியல் வசனங்களுடன் ‘பீஸ்ட்’ டிரெய்லர்..!

இந்நிலையில் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். யோகி பாபு லீட் ரோலில் நடித்த ‘கூர்கா’ படமும் இதே போன்ற திரைக்கதை தான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் மணி ஹெய்ஸ்ட் படத்தின் பட்டி டிக்கரிங் போல் இருப்பதாகவும் ‘பீஸ்ட்’ டிரெய்லரை சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்கள் இந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு டிரெய்லரைவைத்து எதையும் முடிவு பண்ணாதீங்க என பதிலடி கொடுத்து வருகின்றனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கி கொள்ளும் மாலில் உள்ள மக்களை காப்பாற்றும் இராணுவ அதிகாரியாக விஜய் இந்தப்படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் மீது கேஸ்; சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார்!

அடுத்த செய்தியாருக்கு இந்த வார்னிங் விஜய்..?: அனல் பறக்கும் அரசியல் வசனங்களுடன் ‘பீஸ்ட்’ டிரெய்லர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.