ஐபிஎல் : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தடுமாற்றம்

மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெற்று   வரும்   போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன .

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது  .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது 
 பஞ்சாப் அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் , லிவிங்ஸ்டன்  சென்னை அணியின் பந்துவீச்சை   பவுண்டரி ,சிக்ஸர்க்கு பறக்க விட்டார்.
முகேஷ் சௌத்ரியின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 27 பந்துகளில் 5 சிக்ஸர் ,4 பவுண்டரி என அரைசதம் அடித்தார் .
ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி  200 ரன்களுக்கு மேல்  குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ,லிவிங்ஸ்டன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார் . 
பின்னனர் வந்த வீரர்கள் அடுத்ததடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில்  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது .
சென்னை அணி சார்பில் பிரிட்டோரியஸ் ,ஜோர்டன்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய . சென்னை  அணி தற்போது வரை 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ருதுராஜ் ,உத்தப்பா ,மொயின் அலி  ,ஜடேஜா ,ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.