ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி அதிகரிக்கப் போகிறதா.. முக்கிய முடிவெடுக்கப்படுமா?

நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மானிட்டரி கூட்டம் 6 முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கூட்டம் வரவிருக்கும் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 தேதிகளில் நடைபெற உள்ளது.

மத்திய வங்கியின் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் இந்த முறையும் அதிகரிக்கப்படாது என்று கூறப்படுகின்றது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான இந்த கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது.

என்ன நடக்கும்?

இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய முடிவுகள், சில்லறை பணவீக்கம் மற்றும் பணவீக்கம், பொருளாதார நிலை, பொருளாதாரம் பற்றிய கணிப்புகள் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேலும் மேற்கண்ட பல முக்கிய அம்சங்கள் பற்றிய விவாதமும் இந்த கூட்டத்தில் இருக்கும். ஏப்ரல் 6 முதல் தொடங்கவிருக்கும் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முடிவுகள் ஏப்ரல் 8ம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அடுத்தடுத்த கூட்டங்கள்

அடுத்தடுத்த கூட்டங்கள்

இதற்கிடையில் இரண்டாவது மத்திய வங்கிக் கூட்டமானது ஜூன் 6 – 8ம் தேதிகளிலும், மூன்றாவது கூட்டமானது ஆகஸ்ட் 2 – 4 தேதிகளிலும் நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் 4வது கூட்டமானது செப்டம்பர் 28 – 30ம் தேதிகளிலும், 5வது கூட்டம் டிசம்பர் 5 – 7ம் தேதிகளிலும், கடைசி கூட்டம் பிப்ரவரி 6 – 8 2023ம் தேதியிலும் நடைபெறும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

பணவீக்க இலக்கு
 

பணவீக்க இலக்கு

மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பணவீக்க விகிதத்தினை தொடர்ந்து 4 சதவீதமாக வைத்துக் கொள்ளவும், இதிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வைத்துக் கொள்ளலாம் எனவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டி அதிகரிக்குமா?

வட்டி அதிகரிக்குமா?

நடப்பு நிதியாண்டில் நடக்கவிருக்கும் இந்த முதல் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஒரு தரப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று கூறினாலும், மற்றொரு தரப்பு அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 6 முறை வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையில் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வட்டியை அதிகரிக்கலாம்

அமெரிக்கா வட்டியை அதிகரிக்கலாம்

அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் பட்சத்தில், இந்திய பங்கு சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறக் கூடும். இதன் காரணமாக இந்தியா வங்கியும் அமெரிக்காவினைபோல படிப்படியாக வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என ஒரு தரப்பு கூறுகின்றது.

என்ன செய்யப் போகிறது?

என்ன செய்யப் போகிறது?

தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், உக்ரைன் ரஷ்யா பிரச்சனை, கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் அதிகரித்துள்ள பணவீக்கம், ரூபாய் மதிப்பு என பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் பெரியளவில் இறக்குமதியையே சார்ந்துள்ள இந்தியா, பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? பொருளாதாரத்தினை ஆதரிக்க வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருக்குமா? அல்லது உயர்த்துமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

நீங்க என்ன சொல்றீங்க? வட்டி விகிதம் அதிகரிக்கணுமா? இன்னும் சிறிது காலம் மாற்றாமல் வைத்திருக்க வேண்டுமா? உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI’s MPC to meeting schedule for April 6 – 8; RBI may maintain rates to support growth

RBI’s MPC to meeting schedule for April 6 – 8; RBI may maintain rates to support growth/ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி அதிகரிக்கப் போகிறதா.. முக்கிய முடிவெடுக்கப்படுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.