ஐடி துறையில் அதிகரிக்கும் செலவு.. தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா?

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.

தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஆள்பற்றாக்குறையால், கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி துறையானது பெரும் சவால்களை எதிர் கொண்டு வந்தது.

இதற்கிடையில் ஊழியர்களை தக்கவைத்துள்ள பல சலுகைகளையும் ஐடி நிறுவனங்கள் வழங்கி வந்தன. சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு, வழக்கத்திற்கு மாறாக ஒரிரு முறை உயர்வு என வழங்கி வந்தன.

தேவையில் தாக்கம்

இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என நிபுணர்களும் கூறி வந்தனர். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்பட்டது. எனினும் 2023ம் நிதியாண்டில் அட்ரிஷன் விகிதமானது அதிகமாக இருக்கலாம். எனினும் தேவையில் இந்த சமயத்தில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 பணியமர்த்தல் அதிகம்

பணியமர்த்தல் அதிகம்

கடந்த சில காலாண்டுகளாக தேவையானது அதிகம் இருந்து வந்த நிலையில், அட்ரிஷன் விகிதமும் பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்து வந்தது. இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க ஐடி நிறுவனங்களும் பணியமர்த்தலை அதிகரித்து வந்தன. சம்பளமும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது கணிசமாக உயர்ந்துள்ளன. குறிப்பாக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும் பணியமர்த்திக் கொள்ள நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

வலுவான வளர்ச்சி
 

வலுவான வளர்ச்சி

இதற்கிடையில் ஐடி நிறுவனங்களும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றன. தொடர்ந்து பல்வேறு வணிகங்களும், டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் டிஜிட்டல் தேவை அதிகரித்துள்ளது. கிளவுட் டிரான்ஸ்பர்மேஷன், புதிய தொழில் நுட்பங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில், நிறுவனங்கள் இதுவரையில் தொடர்ந்து அதிகளவில் பணியமர்த்தி வருகின்றன.

மார்ஜினில் தாக்கம் இருக்கலாம்

மார்ஜினில் தாக்கம் இருக்கலாம்

எனினும் அடுத்து வரும் 2 காலாண்டுகளுக்கு விலை விகிதமானது கண்கானிக்கப்படும். விலை நிர்ணயம் என்பது முக்கிய காரணியாக இருக்கும். இது 2023ம் நிதியாண்டின் வருவாயில் எதிரொலிக்கலாம். இது நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.  எப்படியிருப்பினும் 4வது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிப்பினால் தாக்கம் இருக்கலாம்

விலை அதிகரிப்பினால் தாக்கம் இருக்கலாம்

மொத்தத்தில் பெரியளவிலான தாக்கம் இல்லாவிட்டாலும், இது தேவை குறையாவிட்டாலும், விலை அதிகரிப்பினால் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ஜினில் தாக்கம் ஏற்படும் போது, அதனை ஈடுகட்ட செலவினங்களை குறைக்க முற்படலாம். புதிய பணியமர்த்தலை தற்போதைக்கு குறைக்க வழிவகுக்கலாம். ஆக ஐடி ஊழியர்கள் இதனையும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Will the rising cost in the IT sector have an impact on demand?

Will the rising cost in the IT sector have an impact on demand?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.