ஐஸ்வர்யாவுக்கு நடந்த 'அந்த கொடூரம்' பற்றி பேசும் நெட்டிசன்ஸ்

2017ம் ஆண்டு மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
பரதநாட்டியம் ஆடினார்.

ஐ.நா. சபையில் இந்திய தூதரகம் சார்பில் பரதம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார்.

ஐஸ்வர்யா வித்தியாசமாக முயற்சி செய்து ஆட, அதை பார்த்து பலரும் கிண்டல் செய்தார்கள்.

சாதாரண ஆட்கள் தவிர்த்து பரதத்தில் பெரிய ஆட்களாக இருப்பவர்களும் கூட ஐஸ்வர்யாவை விளாசினார்கள். ரஜினியின் மகள் என்கிற ஒரு தகுதி தான் ஐஸ்வர்யாவுக்கு உண்டு. அதற்காக எல்லாம் ஐ.நா. சபையில் இப்படி பரதம் ஆடி அந்த கலையை இழிவுபடுத்துவதா என்று பரதக் கலைஞர்களே விளாசினார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து தான் ட்விட்டர் பக்கம் வருவதை நிறுத்தினார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துவிட்டார். அவரே பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்.

இந்நிலையில் அந்த பரத காட்சியை மீண்டும் நினைவூட்டி கிண்டல் செய்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். அதை பார்த்த ரஜினி ரசிகர்களோ, ஐஸ்வர்யாவை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவராவது முயற்சி செய்தார். உங்களுக்கு பரதம் என்றால் என்னவென்று தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் மடியில் உட்காருவதுனு விவஸ்த வேணாம்?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்
கடந்த சில நாட்களாக
ஐஸ்வர்யா
என்ன ட்வீட் செய்தாலும் சமூக வலைதளவாசிகள் விளாசுகிறார்கள்.

அடுத்த செய்திவயலில் இறங்கி வெறித்தனமாய் வேலை செய்யும் பிரபல இயக்குநர்… தீயாய் பரவும் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.