சீமைக் கருவேல மரங்களைப் படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

சீமைக் கருவேல மரங்களைப் படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்தவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் வகுத்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் பரவியுள்ள 196 வகை அந்நிய மரங்களில், 23 வகைகளை அப்புறப்படுத்த முன்னுரிமை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

700 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள அந்நிய மரங்களை அகற்றும் முன்னோடித் திட்டத்துக்கு 5 கோடியே 35 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் 200 எக்டேர் பரப்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.