புலம் பெயர முயன்றவர்களை புதைத்துக் கொண்ட மத்திய தரைக்கடல்! படகு விபத்தில் 100 பேர் பலி

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்த 100 பேர் விபத்தில் பலியானதாக தெரிகிறது. 

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்வது வழக்கம். படகின் கொள்ளளவை விட மிக அதிகமானவர்கள் இருந்ததால் எடை தாங்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
வாழ வழியில்லாமல், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், ஐரோப்பாவிற்கு சென்றால் எப்படியேனும் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்காக புலம் பெயரும் அவலம் நீண்ட நாட்களாக தொடர்வது தான்.

மேலும் படிக்க | லாரி மீது கார் மோதி விபத்து : 5 பேர் உயிரிழந்த சோகம்

பசியில்லா வாழ்க்கையைத் தேடுவதற்காக வட ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர், கரையைத் தொடும் முன்பே கடலில் அடைக்கலமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த வாரம் லிபியாவிலிருந்து புறப்பட்ட படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டது என்றும், படகு எப்போது சிக்கலில் சிக்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் Doctors Without Borders என்ற குழுவின் தலைவர் ஜுவான் மத்தியாஸ் கில் கூறினார்.

ஒரு எண்ணெய் டேங்கர் நான்கு புலம்பெயர்ந்தோரை மீட்டதாகவும் தெரியவந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, உள்நாட்டில் அமைதியின்மை,  சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு காரணங்களால் அல்ஜீரியா, லிபியா உட்பட வட ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சென்னையில் மீண்டும் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் புலம் பெயர்ந்து செல்லும் மக்கள், கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்ய விரும்பினாலும்,  சட்டவிரோதமாக இடம்பெயரும் மக்கள் செல்லும் படகுகள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

அதில் அண்மை விபத்தாக, பெண்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக படகு எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கிக் கொண்டதாகவும், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. 

விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க  | அதிகரிக்கும் தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.