ரேஷன் கார்டு மிஸ் ஆயிடுச்சா… ஆன்லைனில் இப்படி அப்ளை பண்ணுங்க!

ரேஷன் கார்டு என்பது உணவு தானியங்களுக்கான பொது விநியோக முறையின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

குடும்பத்திற்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப அரசு பல்வேறு வகையான ரேஷன் கார்டுகளை வழங்குகிறது.

ஏழைக் குடும்பங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஆவணம், ஏனெனில் ரேஷன் கார்டு இல்லாமல் அவர்களின் மாதாந்திர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினக். ஒரு குடும்பம் ஒரு ரேஷன் கார்டு மட்டுமே பெற முடியும்.

ஆனால் நாம் பல நேரங்களில் ரேஷன் கார்டை எங்கேயாவது தவறவிடவும் வாய்ப்புள்ளது. அந்த மாதிரி சமயத்தில், 20 நிமிடத்தில் நீங்கள் புதிய கார்டு வாங்கிவிடலாம். அதற்கான வழிமுறைகள் என்னென்ன பாருங்க!

முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

உங்களின் பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும்.

இப்போது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

இதனை உள்ளிட்டு, உங்களின் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.

TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான TAB இடம்பெற்றிருக்கும். இதில், கூடுதலாக பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும்.

இதில் மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஆக சேமிக்க வேண்டும்.

அதை பிரிண்ட் எடுத்து தங்களின் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.