டென்னிஸ் போட்டியில் கடற்படை சாம்பியன்| Dinamalar

பெங்களூரு:ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்த டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கடற்படை வீரர்கள் பதக்கங்களை அள்ளினர்.

‘இன்டர் சர்வீசஸ்’ டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 – 22 மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் மற்றும் சென்டரில், மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது.இதில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். குழு டென்னிஸ் போட்டியிலும், ஒருவர் பங்கேற்கும் டென்னிஸ் போட்டியிலும், கடற்படை வீரர்கள், பதக்கங்களை அள்ளினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, கர்நாடக – கேரளா சப் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் பரிசுகள் வழங்கினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.