தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும்


உணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பொக்கிஷமான வார்த்தைகள்.
ஏனெனில் உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது.

ஆரோக்கியமாகவும், நோய் நொடிகள் இன்றியும் வாழ சமைக்கும் உணவுகளோடு சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது மற்றும் ஆபத்தானது?

செம்பு

உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.
ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் எளிதில் வினைபுரியக்கூடாது. இதனால் அதிக செம்பு துகள்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது.

அலுமினியம்

அலுமினிய பாத்திரம் விரைவில் சூடேறிவிடும், மேலும் அமிலத்துவம் வாய்ந்த காய்கறிகளுடன் எளிதில் வினைபுரியும். இதனால் உங்கள் உணவில் பல பாதிப்புகள் ஏற்படும். இந்த வேதியியல் வினைகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.

வெண்கலம்

மிகவும் கடினமான அந்த பாத்திரத்தை தூக்குவதே நமக்கு பெரிய வேலையாக இருக்கும். பொதுவாகவே வெண்கல பாத்திரங்களில் சமைப்பதும், சாப்பிடுவதும் ஆரோக்கியமானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வெண்கல பாத்திரத்தில் சாப்பிடுவது அதில் சமைப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. சூடாக இருக்கும் வெண்கல பாத்திரம் உப்பு மற்றும் அமில உணவுகளுடன் எளிதில் வினைபுரிந்து விடும். இது உங்கள் உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

ஸ்டெயின்லெஸ்

உணவு சமைக்க அதிக பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் ஒன்று ஸ்டெயின்லெஸ் பாத்திரங்கள் ஆகும். ஆனால் உணவு சமைப்பதற்கு இது ஆரோக்கியமான வழி என்பது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த துருப்பிடிக்காத பாத்திரம் முழுவதும் உலோக அலாய் ஆகும். இது குரோமியம், நிக்கல், சிலிக்கான் மற்றும் கார்பன் கலந்த கலவையாகும். ஸ்டெயின்லெஸ் அமில உணவுகளுடன் வினைபுரிவதில்லை. ஆனால் இதனை வாங்கும் முன் அதன் தரத்தை பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் உலோக கலவைகள் சரியான விதத்தில் கலக்காவிட்டால் பல ஆபத்துக்களை உண்டாக்கும்.

இரும்பு

இரும்பு பாத்திரம் அதன் இயற்கையான இரும்பு வெளியிடுதலால் சமைப்பதற்கு சிறந்த பாத்திரமாக விளங்குகிறது. இது நமது உடலின் செயல்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாகும். ஆய்வுகளின் படி இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது குழந்தை பெற்று கொள்ள விரும்பும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றதாகும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.