WFH: டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி வீட்டிலேயே இருக்கலாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடர்ந்து பம்பரமாகப் பணியாற்றி வரும் இதேவேளையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது.

ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்துள்ள நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

டிசிஎஸ்

கொரோனா தொற்றுக் காரணமாக 2 வருடமாக டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹைப்ரிட் மாடல் உடன் ஊழியர்களை அழைத்து வருகிறது. மேலும் ஊழியர்களின் நலனுக்காக டிசிஎஸ் நிர்வாகம் தனது அலுவலகத்தில் 25*25 மாடல், occasional operating zones (OOZ), மற்றும் ஹாட் டெஸ்க் போன்ற சில முக்கியமான சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

உயர் மட்ட அதிகாரிகள்

உயர் மட்ட அதிகாரிகள்

டிசிஸ் நிறுவனத்தின் தற்போது உயர் மட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றத் துவங்கியுள்ளனர், விரைவில் படிப்படியாகப் பிற ஊழியர்களுக்கும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த சில மாதத்தில் பெரும் பகுதி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர உள்ளனர்.

நிரந்தர WFH
 

நிரந்தர WFH

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலையை ராஜினாமா செய்யும் வழக்கம் குறைந்துள்ளது. இதனால் ஊழியர்களைத் தக்க வைப்பதில் டிசிஎஸ் சிறந்து விளங்குகிறது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ் நிறுவனத்தைப் போலவே இன்போசிஸ் நிறுவனமும் பல ஊழியர்களுக்கு நிரந்தமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் புதியதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் வாய்ப்பு அளிக்கிறது.

ஆபீஸ்-க்கு வரனுமா.. எனக்கு வேலையே வேணாம்.. ராஜினாமா செய்யும் ஊழியர்கள்..! #WFH

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS Continues Work From Home: Allows employees to take permanent WFH option to Avoid Attrition

TCS Continues Work From Home: Allows employees to take permanent WFH option to Avoid Attrition WFH: டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி வீட்டிலேயே இருக்கலாம்..!

Story first published: Wednesday, April 6, 2022, 8:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.