26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான மும்பை 26/11 தாக்குதல்களின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீதுக்கு இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீதுக்கு ₹ 340,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

70 வயதான ஹபீஸ் சயீத் இன்னும் பல பயங்கரவாத நிதியுதவி வழக்குகளிலும் தண்டனை பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.