பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பு நிறைவேறினால் இஸ்லாமிய தேசத்தின் புதிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார்.

220 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானின் பணம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியின் தாக்கம், அந்த நாட்டுடன் தொடர்புடைய பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.   

மேலும் படிக்க | இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது

ஆப்கானிஸ்தான்
சமீப ஆண்டுகளில், தலிபான் மற்றும் பாகிஸ்தானின் இராணுவ புலனாய்வு அமைப்பு முன்பு போல் நெருக்கமாக இல்லை. தலிபான்களுக்கு ஒரு வழித்தடமாக பாகிஸ்தான் தேவையில்லை. கத்தார் தற்போது அந்த் வேலையை செய்கிறது என்று கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பல நாடுகள் அந்நாட்டுடனான வர்த்தகத்தை புறக்கணித்துள்ளன, இதன் விளைவாக, ஆப்கனும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

தீவிரவாத குழுக்களை ஒடுக்க தலிபான்கள் மேலும் பலவற்றை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் பாகிஸ்தானுக்குள் வன்முறையை பரப்புவார்கள் என்ற அச்சமும் உள்ளது, அந்த பயம் நிதர்சனமாகிவிட்டதையும் பார்க்க முடிகிறது.  

ஆப்கனில் மனித உரிமைகள் நசுக்கப்படுவது தொடர்பாக தலிபான்களை விமர்சிப்பதில்  இம்ரான் கான்  நாசூக்கு காட்டுகிறார்.

சீனா

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களை துருப்புக்கள் முடிவுக்குக் கொண்டு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. 

பிரிவினைவாதிகள் பல ஆண்டுகளாக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பிராந்தியத்தில் சீனா கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளது.

அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏராளமான இயற்கை வளங்களால் அங்கு வசிக்கும் மக்களின் வறுமை நிலை தீரவில்லை என்ற கோபம் மக்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது கிளர்ச்சியின் பின்னணியாகும்.

மேலும் படிக்க | அஜ்மல் கசாப் குறித்த தகவலை இந்தியாவிற்கு கொடுத்தது நவாஸ் ஷெரீப்!

​​”பாகிஸ்தானின் தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் கண்ணியம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் சீனாவின் தரப்பு உறுதியாக ஆதரிக்கிறது” சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.

வளர்ச்சி உத்திகளை சீரமைப்பதில்” பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின்போது அவர் வலியுறுத்திக் கூறினார்.

முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷெரீப், பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமான பஞ்சாபின் தலைவராக நேரடியாக சீனாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் பிரச்சனைகளை தவிர்க்கும் அதே வேளையில், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பெறுவதற்காக ஷெரீப் என்ற் பெயர் சீனாவிற்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இம்ரானின் பின்னடைவால் பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றே கூறலாம்.  

இந்தியா
1947 இல் இந்தியாவில் இருந்து பிரிவதற்கு முன் இந்தியாவாகவே இருந்த இன்றைய  பாகிஸ்தான், தற்போது அதே மூல இந்தியாவின் அண்டைநாடு. இரண்டு அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கும் இடையே ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பாக மோதல்கள் தொடர்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் போரே வந்த நிலையில், போர் நிறுத்தம் காரணமாக எல்லைப் பகுதியில் பதட்டங்கள் கட்டுக்குள் இருக்கின்றன.  

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டினார், வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் புது டெல்லியின் சுதந்திரமான நிலைப்பாட்டை பாராட்டினார்.

பல ஆண்டுகளாகப் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திரப் பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை, பலவிதமான பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஆழ்ந்த அவநம்பிக்கை நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அரசியல் சிக்கல்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. 

மேலும் படிக்க | இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது

அமெரிக்கா
69 வயதான கான், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார், ஆனால் அமெரிக்காவின் சதியால் தான் பாதிக்கப்பட்டதாக வலியுறுத்தினார். தற்போதைய அரசியல் நெருக்கடியில் தனக்கு எந்த பங்கும் இல்லை என அமெரிக்கா மறுக்கிறது.

உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி முன்னுரிமையாக இருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தெற்காசிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிய இராணுவம் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின்  கட்டுப்பாட்டைப் பேணுவதால், கானின் அரசியல் தலைவிதி ஒரு பெரிய கவலையாக இல்லை என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான விஷயங்களில் ராணுவம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பாகிஸ்தானின் அரசியல் சிக்கல்களில் அமெரிக்காவிற்கு பங்கு இல்லை” என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெற்காசியாவிற்கான மூத்த இயக்குனராக பணியாற்றிய கர்டிஸ் தெரிவித்தார்.

இம்ரான் கானின் மாஸ்கோ பயணம், அமெரிக்க உறவுகளின் அடிப்படையில் ஒரு “பேரழிவு” என்றும், இஸ்லாமாபாத்தில் ஒரு புதிய அரசாங்கம் அமைவதால், அமெரிக்காவுடனான உறவை குறைந்தபட்சம் “ஓரளவுக்கு” சரிசெய்ய உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் “விரைவில்” பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.