ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

கிவ்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார். 

கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில்  நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். 

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ‘தன் நாட்டை ஒடுக்கிய எந்தவொரு நபருடனும் அல்லது மக்களுடனும் யாரும் சமரசம் செய்ய விரும்பவில்லை. ஒரு தந்தையாகவும், ஒரு சாதாரண மனிதராகவும், நான் இதை நன்றாக புரிந்துகொள்கிறேன்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

‘வாழ்வதற்குப் போராட வேண்டும்’

ஆனால், இராஜீய நிலையில் தீர்வுக்கான வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைன் அதிபர், ‘நாம் வாழ போராட வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் இழந்து விட்டு போராட முடியாது. அங்கு எதுவும் இல்லை, மக்கள் இல்லை. அதனால்தான் இந்தப் போரை நிறுத்துவது முக்கியம் என்றார்.

மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

அமைதிக்கான நம்பிக்கையை வெளியிட்ட அதிபர்

ஆறு வாரகாலப் போருக்குப் பிறகும் உக்ரைன் மக்கள் அமைதியை ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக ஜெலென்ஸ்கி கூறினார். சமாதானத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் அதிபர், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ளவில்லை. கீழ் மட்டத்தில் தான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.